Friday, March 25, 2022

காவிய காதலன் - 06. (டிஜிட்டல் காதல் தூதர்)


-

(டிஜிட்டல் காதல் தூதர்)



இன்று போல் தனியாருக்கு விற்கப்படாத ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக ரன்வேயில் கிழம்ப சத்தமெழுப்பி கொண்டிருந்த திருவள்ளுவராண்டு 2049 காலமது........



நான் அன்று என் வாழ்வின் முதல் (அ) முழுநீள மகிழிச்சி நாள் அதுமட்டுமே என அத்தனை மகிழிச்சியாக இருந்தேன்.காரணம் ஒன்றே ஒன்று தான் . என்னவள் எனதருகில் அமர்ந்திருந்தாள். கண்களை இருக மூடிக்கொண்டு முதல்முறை பறப்பதை நினைத்து பேனிக் ஆகிகொண்டுயிருந்தாள்.


முதல்முறை பயணிக்கும் எனக்கு எந்த பயமுமில்லை. ஏனெனில் அவள் என்னருகே இருந்தாள். அவள் அருகில் இருந்தால் பாராசூட்டின்றி ச்கை டைவிங் செய்யவே நான் தயார்.....(சாவுலே செத்த பயலேங்குற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது) 



சென்னையிலிருந்து ஹரியானவுக்கு செல்லும் ஏர் இந்தியா KB143 தரைதளத்திலிருந்து வானில் பறக்க ஆயத்தமாகவுள்ளது என தமிழில் ஃப்ளைட் கேப்டன் அறிவித்தார்.



.த்ரீரீரீ......டூடூடூடூ.....ஒன்.


லேசாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து சன்னல் வழியே பயந்துகொண்டே பார்த்துவிட்டு தன் முந்தைய படபட நிலைக்கு திரும்பினாள்.


தரையிலிருந்து ஆயிரமடி உயிரத்தில் KB143 பறந்துகொண்டிருக்க நானோ பத்தாயிரமடி உயரத்தில் பறந்தேன் அவள் பயத்தில் என் கைகளை இருக பற்றியிருந்ததாள். 


அவள் கைகள் மேல் என் கைகளை வைத்துக்கொண்டு, " ஏய் லூசு ! ஒண்ணுமில்லை வெளிய எட்டி பாரு " என்றேன். அவளுக்கு வெளியே பார்க்க தைரியமின்றி மூடிய கண்களுடன் என் கைக்குள்ளே அவள் கையிருக்க என் தோள்மீது சாய்ந்தாள்.


பாக்யராஜ் படங்களில் வரும் தம் தந தம் தந தா.....இளையராஜாவின் ஒட்டுமொத்த சிம்பொனிகளின்  இசை.....என காக்டெயில் லவ் வைஃப்ஸ் மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சது.
டோஃப் அடிக்காமலயே கிரங்க வைக்குற யுவன் பாட்ட கேட்ட மாதிரி என் மனசு வேற ஒரு லோகத்துல லயித்திருந்தது.


திடீர்னு கண்ண திறந்து பார்த்தா என் தோளினிள் சாய்ந்திருந்த என் உற்ற க்ரஷ் கம் காதலியை காணவில்லை. அவளமட்டுமில்ல அந்த ஃப்ளைட்ல உட்கார்ந்திருந்த அத்தனை பேரையும் காணும். சீட் பெல்ட்ட கழட்டிட்டு டக்குன்னு எந்திரிச்சு கேப்டன் அறைய நோக்கி போனேன்.


ஹலோ!! கேப்டன் சார்.. யாராச்சும் இருக்கீங்களா??என்றேன் கேப்டன் அறையை நோக்கி .






 கேப்டன் ரூமின் கதவை தட்டினேன். கதவை திறந்து என்னவள் வந்தாள். அவள் வந்தவுடன் லைட்டுகள் அனைத்தும் அணைந்து ஃப்ளைட் முழுவதும் கேண்டில்கள் ஏற்றபட்டு இருந்தது. ஃப்ளட்டே பார்க்க மஞ்சள் நிறத்தில் மின்னியது. அவளின் பின்னால் கேப்டன் மற்றும் சிப்பந்திகள் நின்றுகொண்டு ஆளுக்கொரு கையில் வயலின்,  சாக்ஸாஃபோன் சகிதம் வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத உணர்விது இசைத்துக்கொண்டுயிருந்தனர். என்னவள் நீல நிற ஏஞ்சல் டிரஸ்ஸில் எனதருகே வந்து என் கையை பிடித்து ரோஜா பூ போட்ட ஒரு கிரீட்டிங் கார்டினை கொடுத்தாள்.



என்ன நடக்குது இங்க,  இது கனவா  நினைவா என்று புரியாமல் என்ன எழுதியிருப்பாள் என ஆவலாய் அதை பிரித்தேன்.

"Jk,  YOU ARE BLOCKED" என எழுதியிருந்தது.


"வாட்?என்னது இது, ப்ளாக்கா!  என்ன ப்ளாக் ,என்றவுடன் பக்கத்தில் இருந்த எல்.ஈ.டி யில் என்னவள் என்னை ப்ளாக் செய்த ஸ்க்ரீன்ஷாட் இருந்தது.அங்குமட்டுமல்ல ஃப்ளைட்டின் அத்தனை சீட்டுகளிலுள்ள டிஸ்ப்ளேவிலும் அதே ஸ்கிரீன்ஷாட்கள்..

ஜே.கே, "என்னந்த இதெல்லாம்!" என்றேன்.

சிரித்துகொண்டே, " எஸ் யூ ஆர் ஃப்ளாக்டு சீனியர் .ஃப்ளைட் ஓட்றவங்க பேரு கேப்டன் இல்ல ஃப்ளைட்டு டா லூசுப்பபயலேன்னு சொல்லிவிட்டு ஃப்ளைட் கதவை திறந்து என்ன தள்ளிவிட்டாள்".


ஆஆஆஆஆ. ....அய்யோ..... அம்மாமாமாமாமாமா...... என கத்திக்கொண்டே கட்டிலிலிருந்து தரையில் விழுந்தேன். என்னாச்சு இப்ப ! கண்கள் ஒரு நிமிடம் அங்குமிங்கும் அலைமோதியது.


 லெஃட் சைட் வால் க்ளாக்கில் சின்ன முள் பத்திலும் பெரிய முள் ரெண்டிலும் இருந்தது.ரைட் சைடிருந்த கலைஞர் டிவியில் இந்திய தொலைக்காட்சிகயில்  முதன்முறையாக என சன் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படமான பாபநாசம் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. அடடா கனவா இது. ஆனா அது நெஜமாயிருக்கலாம். என்னதான் அவ ஃப்ளைட்லயிருந்து தள்ளி விட்டிருந்தாலும் அவகூட அவ்ளோ நெருக்கமான பயணம் அமைஞ்சிருக்காதுல.


அன்னைக்கு 
அவ ப்ளாக் பண்ணவுடனே செம டென்சன் ஆகிட்டேன். உனக்கென்ன அவ்ளோ திமிரு. ப்ளாக் தானே !  பண்ணிட்டு போ என அவளை திட்டிக்கொண்டே என் நண்பன் விஷ்வா பாயை கூட்டிகொண்டு சண்முகம் அண்ண கடைக்கு டீ குடிக்க கெழம்பிட்டேன்.



 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை  விட உக்கிரமா பாதிக்கப்பட்ட கடலூரின் மீது மக்களின் பரிதவிப்போ கடைகண் பார்வையோ படாமலும் ;  வாட்ஸ்அப் கருப்பு டிபிகளும் மாற்றப்படாமல் அந்த டிசம்பர் கழிந்தது.


ப்ளாக் பண்ணின இந்த ரெண்டு மாசத்துல ரொம்ப கவலைலாம் நான்  படல.ஏன்னா அவ நெனைப்பே எனக்கு வராதபடி பேத்தாலஜி( Pathology) ரெக்கார்டும் ஹெர்பேரியம் (herbarium) கலெக்சனும் என்னை வாட்டி வதைத்துகொண்டிருந்தது. 



நேத்து நைட் தூங்கறதுக்கு முன்னாடி கூட அவள பத்தி நம்ப நினைக்கலையே. அப்புறம் எப்டி அவ நம்ப கனவுல வந்தா! அப்ப நம்ப ஆழ்மனைசுல எதோ ஓர் ஓரத்துல கருவேலமரத்த போல வேரூன்றிட்டா போல.




என் கனவுல முதன்முதலா என் ஸ்கூல் க்ரஷ் சிந்துக்குப்புறம் வந்தது இவதான். என்னது ஸ்கூல் க்ரஷ்ஷா ! உனக்கு எத்தனை க்ரஷ் தான் இருக்காங்க என நினைக்க வேணாம். நமக்கு புடிச்சு போய் நம்பளால காதலியாக்கா முடியாத  அத்தனை பொண்ணுங்களுமே க்ரஷ் தான்.



சிந்து கடைசியா பதினோன்னாவது படிக்கும்போது என் கனவுல வந்து கௌரவ தோற்றம் பண்ணிட்டு போனாங்க. இப்ப இவ ஏன் கனவுல வந்தா!  நிஜமாகவே நமக்கு காதலிருக்கோ அவ மேல.! கனவுல வரவங்கள தான் காதலிக்கணும்னா நான் ஸ்டெம்பர் பாலை தான் காதலிக்கணும். ஏன்னா எனக்கு வாழ்கையுல இதுவரை அதிகமா வந்த கனவு ஸ்டெம்பர்  பால் கிடைக்கற கனவு தான்.


சரி ! இருந்தாலும் கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்காலாமே.  ஏன்னா முயற்சி திருவினையாக்கும்னு நம்ப டோராவே சுட்டி டிவியில சொல்லியிருக்காங்களே! 


அவளுக்கு நார்மல் டெக்ஸ்ட் மெசேஜ் பண்ணேன். ரிசீவ்டுன்னு காட்டிச்சு ஆனா பத்து நிமிசத்துக்கு மேல ரிப்ளே வர்ல. ! !


கம்பெனி நோட்டிஃபிகேசன் மெசேஜ்னு நெனைச்சு பார்க்காம விட்ருப்பாலோ! 

நம்ப காதலா (அ) வெறும் க்ரஷ்ஷான்னு தெரியாத அந்த இனம்புரியா இன்புமூட்டூம் செயலுக்கு நமக்க உதவ யாருமேயில்லையா என நினைக்குறப்ப தான் டேபிள்ல இருந்த உண்டியலை சன்னல் ஸ்கிரீன் காற்றின் மிகுதியால் தூக்கி ஒரு ஸ்மாக் (Smack) போட்டிச்சு தரையில. அதிலயிருந்த காசெல்லாம் சண்டேஸ்ல நகராட்சி கிரவுண்டுல எது நம்ப பந்துன்னே கேட்ச் பிடிக்க ஓடுற ஃபீல்டர்ஸை போல குறுக்கையும் மறுக்கையும் சிதறிட்டுயிருந்திச்சு. என்கால் கட்டைவிரல ஒரு ஒரு ரூபாய் ஃபீல்டர் வந்தடைந்தார்.


 பெரிய பெரிய நிறுவனங்களே ஒரு ஒத்த ரூபாயில பல கோடி டெண்டர்களை இழந்த வரலாறு உண்டு. கல்யாணத்துல கோடி ரூபாய் மொய் வச்சாக்கூட டாப்ல உக்கார்றது ஒரு கோடியே ஒண்ணாகிய இந்த ஒரு ரூபாய் தான். அப்படிபட்ட ஒரு ரூபாயையே நமக்கான தூது புறாவாக பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணேன்.


கூகுள் பே (G-Pay)ல் அவ நம்பருக்கு 1 ரூபா அனுப்பிட்டு "ஹாய்" சொன்னேன்.

"என்ன ?" என ரிப்ளே செய்தாள் ஃபேஸ்புக்ல.


அந்த என்ன என்பது கோபமா சொன்ன என்னவா இல்ல கேசுவலா சொன்ன என்னன்னு தெர்லையே. சரி ஃபோன் பேசுனா நல்லா இருக்குமே" என நினைத்தேன்.


"எமர்ஜெசி ! கால் ப்ளீஸ் " என்றேன்.


அடுத்த கன நொடியே 
சிறு சிறு உறவுகள் பிரிவது பாடல் என் மொபைலில் ஒலித்தது...அவளே தான்.அட்டெண்ட் செய்தவுடன்," என்ன வேணும் உனக்கிப்போ " என்றாள் சிடுசிடுப்பாக.



"ஒண்ணுமில்ல சும்மா தான். பேசக்கூடாதா என்ன" என்றேன்.

" இங்க பாரு புரிஞ்சிக்க, தயவுசெய்து நீயும் இத மாதிரி தொல்லை பண்ணாதே ! ஏற்கனவே இங்க ஒருத்தன் டார்ச்சர் பண்றான் "என்றாள் .


" யாரு டார்ச்சா பண்ற அங்க,  என்னாச்சு " என்றேன்.


" எங்க காலேஜ் சீனியர் ஒருத்தன் என்னைய காலேஜ்லயிருந்து சந்திரம் பஸ் ஸ்டாண்டு வரை பின்னாடியே ஃபாலோ பண்ணி வர்றான். கையில ஒரு ரோஸ், கிரீட்டிங் கார்டு வேற வச்சிருக்கான்.போக சொன்னாலும் போக மாட்றான் " என்றாள் வழக்கமான அவளின் பரிதவிப்பான குரலில்.




என்ன தான் அவ என்னைய ப்ளாக் பண்ணினாலும் அவ இப்டி பேசுனவுடனே எனக்கு மனசு கேக்கல.


"ஏய் எதுக்கு பதற்ர , வீரத்த உலகத்துக்கே பாட்டுல சொன்ன முண்டாசு கவியோட பேர வச்சுக்கிட்டு பயப்படலாமா" என்றேன்.


" சுட்சுவேசனை ஃபேஸ் பண்றவங்களுக்கு தான் தெரியும் கஷ்டம் என்னன்னு " என்றாள்.


" சரி நான் சொல்றத கொஞ்சம் கேளேன் "என்றேன்.


" ஒரு இம்சைகிட்டயிருந்து தப்பிக்க இன்னொரு இம்சை ஹெல்ப் பண்ண போகுதாக்கும் " என்றாள்.


இவ்ளோ டென்சன்லையும் இவ கொழுப்பு மட்டும் குறையலையே. அது சரி அழகாயிருந்தா திமிரும் கூடவே இருக்கும் போல என மனசுல நெனச்சுக்கிட்டேன்.


" ஃபோன் பேசுற இம்சையவிட நேர்ல இருக்க இம்சை பரவாயில்லையா அப்போ" என்றேன்.



"சரி , சாரி சாரி என்னன்னு சொல்லுப்பா " என்றாள்.


அடடா திமிரு பிடிச்சவள்லாம் இல்ல . சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டாளே , தன்மையானவள் தான்.


"சந்திரம் பஸ் ஸ்டாண்டுல எந்த இடத்துல இருக்க "என்றேன்.


" இந்திரா காந்தி காலேஜ் பக்கத்துல நிக்குறேன் " என்றாள்.


" பக்கத்துல பெரியசாமி டவர்னு ஒரு பில்டிங் இருக்கும் . அதுக்குள் போ "என்றேன்.


"அது எங்க இருக்குன்னு எனக்கெப்புடி தெரியும் "என்றாள்.

" காலேஜ் படிக்குற ஊர்ல உள்ள இடத்த தெரிஞ்சு வச்சிக்கமாட்டியா. பக்கத்துல யார்ட்டையாச்சும் கேட்டுட்டு போமா" என்றேன்.


"ஆங் வந்துட்டேன் "


" ஃபர்ஸ்ட்  ஃப்ளோர்ல ஒரு ப்ரௌசிங் சென்டர் ஒண்ணு இருக்கும் பார்ரு, அதுக்குள்ள போ "


" ஏன் உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா இங்க....ஆங் போயிட்டேன் " என்றாள்.


" அவன் பின்னாடி வர்றானா என்ன" என்றேன்.


"இல்ல வெளில தான் நிக்கிறான்.எப்டியும் இன்னும் நான் அரைமணி நேரத்துல இங்கயிருந்து சென்ட்ரலுக்கு போனாதான் வேதாரண்யம் போற 108B புடிக்க முடியும்" என்றாள்.

"பொங்கல் லீவுக்கு இப்ப தான் கெழம்புறியா? நான் நேத்தே ஊருக்கு வந்துட்டேன்.பஸ் கூட்டமா இருக்குமே" என்றேன்.


" டேய்,  ஐடியா சொல்றா,  என்றாள். "


எனக்கு "டா" சொன்னா பிடிக்காதுன்னு சொல்லியிருக்கேன்ல"என்றேன் .


" சரி, சொல்லுங்க சார் ,ப்ளீஸ் " 


"அங்க கேபின் நம்பர் 10 க்கு பின்னாடி போ ய் பாரு.கொஞ்ம் மறைவா இரு எக்சிட் டோர் ஒண்ணு இருக்கும்.அதுல போய் ரோடு வந்தவுடனே ரைட் சைட் போ வேகமா, தெப்பகுளம் வரும்" என்றேன் ..


"  என் பேச்சை முதன் முதலா தட்டாம கேட்டுக்கிட்டே வேக வேகமா நடந்தாள் " 


"பின்னாடி வர்றானா என்ன? "என்றேன்.


" இல்லயில்ல,  நீ சீக்கிரம் சொல்லு அடுத்து என்ன பண்ண சொல்லு " 


"தெப்பக்குளம் பக்கத்துல அம்மா மெஸ்னு ஒரு பரோட்டா கடை இருக்கு பாத்தியா" 


"ஆமா இருக்கு " என்றாள்.


"நல்லாயிருக்கும் புரோட்டோ, ரெண்டு பார்சல் வாங்கிட்டு போயேன் " என்றேன்.


"ஏய்ய் கடுப்பேத்தாதே " என்றாள்.


"அம்மா மெஸ் தாண்டி நேரே போய் லெஃப்ட் எடுத்து ரைட்டு எடு,  செயிண்ட் ஜோசப் சர்ச் தெரியும் பாரு. சர்ச் வந்தவுடனே கொஞ்சதூரம் லெஃப்ட்ல நடந்து போனா மலைகோட்டை கேட் இருக்கும் , வாசல்ல போலீஸ் நிப்பாங்க எப்பையுமே. அங்க சிக்னல் இருக்கும் அதுல பஸ் ஏறிக்கோ" என்றேன்.


பண்ணன்டாவது முடிஞ்சுப்புட்டு ரெண்டு மாசம் கேர்ல நீட் கோச்சிங்குர பேர்ல திருச்சிய சுத்துனதுக்கு இன்னைக்கு தான் முழு  பலனைட்ஞ்சேன்.

" பஸ் வந்திடிச்சு நான் அப்புறம் கூப்பிடுறேன்னு கட் பண்ணிட்டா"


சரின்னுட்டு சும்மா ஃபேஸ்புக்ல "Scroll down without liking this posts" மீம்களை சுவைப் அப் பண்ணி கொண்டிருந்தேன்.

"Your account credited with Rupees 1 "என மெசேஜ் வந்திருந்தது.அதை தொடர்ந்து
கூகுள் பேவில்  ஒரு மெசேஜ் வந்திருந்தது "$Orry" என்று.


அவள் தான் .டிஜிட்டல் இந்தியா நல்லா இருக்கிறதே !


மறுபடியும் ஒரு மெசேஜ் ," Thnks " என்று.இம்முறை வாட்ஸ்அப்பில்.


காணாமல் போன அவளது வாட்ஸ்அப் டிபியில் ஒரு நீல நிற பட்டாம்பூச்சி இருந்தது.


ஒரு பூ பூத்துதான் ஆகும் ,

மேகம் மழையினை பொழிய தானே செய்யும் ;

2:30 மணிக்கு 108B ல் ஏறிய பின் கிழம்பிட்டேன் என அதே கூகுள் பே (G - pay)வில் மெசேஜ் அனுப்பினாள்.

அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு  திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரியார் சிலைக்கு அருகில் காத்திருந்தேன்.


5 மணிக்கு வர வேண்டிய பஸ் 6 மணியாகியும் வரல.

"எங்க இருக்க," என்றேன்.

" கரியாப்ட்டிணம் தாண்டி போயிட்டுயிருக்கேன்"என்றாள்.

"என்னது! கரியாப்பட்டிணமா, திருத்துறைப்பூண்டிகுள்ள பஸ் வந்திச்சா இல்லையா" என்றேன்.


இல்ல டிக்கெட் எல்லாமே வேதாரண்யம் தானா,  பஸ் ஃபுல்லாயுடிச்சுன்னு பஸ் ஸ்டாண்டுக்கு வராமா பழைய பஸ் ஸ்டாண்டோட திரும்பிட்டோம் " என்றாள்.


" ஓ ! என்றேன் உச்சகட்ட ஏமாற்றத்துடன் " 

" பஸ் வர்றாதது உனக்கு எப்டி தெரியும் " என்றாள்.

"ஒண்ணுமில்ல!  சும்மா கேட்டேன்,  ஹாப்பி ஹாலிடேஸ் "ன்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ணிட்டேன்.

இந்த லக்குங்குறது  எல்லாம் எப்பையுமே நமக்கு இருக்காதுபோல என்ற சோகத்துடன் பாஸ்கர் அண்ண கடைக்கு டீ குடிக்க கிழம்பினேன்.

புது பஸ் ஸ்டாண்டிற்கும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கும் இருக்கும் அரை கிலோமீட்டர் தூரத்தில் என்னவளை தவறவிட்டேன்.


 " உப்பு காற்றில் நீ இருக்க 
    உன் சுவாசமாய் நானிங்கே 
தொலைந்தும் தொலையாமலும் "
                              
                         - போலி கவிஞன்.

 









காவிய காதலன் - 01





                 காவியகாதலன் #01

(Jkவும் 😎வும் துறைமுகத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்)


😎: எந்த தைரியத்துல நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ற


Jk: இதுக்கு எதுக்கு தைரியம்...தோணிச்சு...அப்புறம் ஆசை....உன்கிட்ட சொல்ல...


😎: நீ யூடியூப்ல டிவியுல நடிக்குறத பார்த்து நான் இம்ப்ரஸ் ஆகி உனக்கு ஓக்கே சொல்வேன்னு நெனச்சியா??


Jk: என்னதே லூசு மாதிரி பேசுற?


😎: Dont cross ur limits


Jk: ஆமா ஆமா.... க்ராஸ் பண்ணிட்டாலும்?


😎: என்ன?


Jk: ஒண்ணு புடிக்குதுன்னு சொல்லு இல்ல... புடிக்கலைன்னு சொல்லு....


😎: எனக்கு உன்னைய புடிக்கவும் இல்லை பிடிக்காமலும் இல்ல...எனக்கு நீ வேணாம்....ஐ மீன் இது எதுவுமே வேணாம்... புரியுதா?


 Jk: அதான் ஏன்?

 
😎: ஏன்னா....தெர்ல!அப்புறம் எங்க வீட்ல என்ன பத்தி என்ன நினைப்பாங்க.


Jk: அவங்க நினைக்குறது இருக்கட்டும் நீ என்ன பத்தி என்ன நினைக்குற?


😎:உன்ன பத்தி நினைக்க எனக்கு ஒண்ணுமில்லை...


Jk: கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே...


😎: இப்டி கெஞ்சுறியே வெட்கமாயில்லை??


Jk: திருடுறது,பொய் சொல்றது,கெஞ்சுறது இது மூணுமே பிடிக்காது எனக்கு...ஆனா கடைசி ரெண்டையும் நம்ம காதலுக்காகநான் பண்ணிருக்கேன்.


😎: Sorry...நம்ம காதலா??(முறைக்கிறாள்)


Jk: சரி என் காதல்(ம்ம்ம் என முறைக்கிறாள்)...சரி காதல் இல்ல ....ஒன் சைடடு க்ரஷ்னு வச்சிக்கலாலாமா...


😎: இந்த வார்த்தையெல்லாம் எங்கிருந்து தான் க்ரியேட் பண்றீங்களோ....


Jk: Love பண்ணி பாருங்க Oxford dictonary ல இருக்கறதவிட ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும்....


😎: அதுகெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்டும் இல்ல நேரமும் இல்ல.....இந்தா ...எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.....இதகொடுக்க தான் உன்னைய மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்...நீ என்னடானா சம்பந்த சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு இருக்க????


Jk: லாஸ்டா ஒரே ஒரு சேன்ஸ் கொடேன்...இந்த ரெண்டு மாசம் பேசிபழகி பார்ப்போம்....அதுக்கு அப்புறமா ஒரு முடிவ சொல்லு.....


😎: டேய்... எனக்கு நிச்சியதார்த்தமே முடிஞ்சிருச்சுடா?


Jk: கல்யாணம் ஆகலையே இன்னும்..இனி கூட உன் மனசுமாற வாய்ப்பிருக்கே


😎: என்ன ரெமோ படம் பாத்தியா நைட்டு .....கிறுக்குத்தனமா பேசிக்கிட்டு இருக்க...


Jk: உன்ன மீட் பண்ண வந்ததுனால இந்த 20 ரூபாய் பத்திரிக்கையும் 50 ரூபாய் பெட்ரோலும் வீணாபோனதும் தான் மிச்சம்...


😎: (கிளம்புகிறாள்)

 Jk: Oru nimisham...(இந்தா என ஒரு புக்கை ப்ரசெண்ட் செய்கிறான்....)

 
😎:(பிரித்துபார்த்துவிட்டு)என்னது இது??


 Jk:ராவணகாவியம்.நாம எல்லாருக்கும் சீதைய கொடும படுத்துன ராவணன தான் தெரியும் ராமாயணத்தால..சீதைய எப்டி பாத்துக்கிட்டான்னு இந்த ராவணகாவியத்துல இருக்கும்....டைம் இருந்தா படி.....
"ஓ நீ ராவணன்,என் புருஷன் ராமனா??"


Jk :புருஷனா ....அதுக்குல்லையா????அவன் ராமனோ இல்ல ராவணனோ தெர்ல... எனக்கு நீ எப்பையுமே சீதா தான்.....

😎:(பத்திரிக்கையை கொடுத்துவிட்டு Scooty zest ல் மினியான் பொம்மை போட்ட கீ செய்னை எடுத்து சொருகி......கிர்ர்ர்ர்ர்ர் என ஸ்டார்ட் செய்கிறாள்.....)

Jk:(வெறுமையொடு பார்க்கிறான்)

                (தொடரும்...........)