Friday, June 11, 2021

மீடியா செய்வது சரியா?

"ஏ வேசி ஊடகமே!!"
.
.
.

"ஏய் மானங்கெட்ட ஊடகமே!!!"
.
..
.
"பொதிகையில் செய்தி பார்த்த காலங்கள் என்ன அலாதி"யானவை தெரியுமா என பல கொரோனா காலத்து ஃபேஸ்புக் போராளிகள் பதிவிட்டு வருகின்றனர் தொடர்ந்து.
.
.
.
#அண்டா__திருட்டு__முதல்____அண்டார்டிக்காவரை:

ஊடகத்தின் பிரதானமான வேலை நியூஸ் ப்ரேக் பண்றது தான்.அந்த நியூஸ் நல்ல செய்தியாவோ கெட்ட செய்தியாவோ இருக்குறது அவங்க கையில இல்ல.

"புயல் காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதும் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு"ங்குறது மட்டும் செய்தி இல்லை.அமேசன்ல வர காட்டு தீ முதற்கொண்டு  ஆண்டிப்பட்டில யாரோ ரெண்டு பேருக்கு இடையில நடக்குற வேலி தகராறு வரை எல்லாமே நியூஸ் தான்.அதுல உங்களுக்கு எது முக்கியமோ அத எடுத்துக்கோங்க.
.
.
.

#அமைதி_பூங்காவாம்_தமிழகம்:

முன்னாடி பொதிகை இருந்த காலத்துல அவனுங்க சொல்ற அந்த அரைமணிநேரம் மட்டும் தான் செய்தியா?அதை தாண்டி வேற எதுவுமே உலகத்துல நடக்கலையா?இன்னைக்கு சூழ்நிலையில ஒரு செய்தி பலதரப்பட்ட கோணங்கள்ல பரப்ப படுது. 

அதுல உண்மை எல்லார்கிட்டையும் போய் சேர்ற நல்லதும் இருக்கும் ஒரு தரப்பு நியாயம் மட்டுமே போய் சேர்ற கெட்டதும் இருக்கு.
ஆனா பொதிகை இருந்த காலத்துல அரசுக்கு எதிரா எந்த கருத்தாச்சும் சொல்லி நியூஸ் வெளியிட்ற முடியுமா?
(இப்புவுள்ள செய்தி நிறுவனங்களை கட்சிகள் கைக்குள் போட்டு கொண்டது வேற கதை)
.
.
.

#புடிச்சது_எடுத்துக்கோ:

விதவிதமா ரகரகமா பிரிச்சு பிரிச்சு நியூஸ் போடுறானுங்க
விளையாட்டு,
சினிமா,
அரசியல்,
க்ரைம்,
உள்ளூர்,
வெளிமாநிலம்,
வெளிநாடு ,
ஏன் விண்வெளின்னு ஸ்லாட்டு ஒதுக்கி நியூஸ் போடுறானுங்க.

"ஒரு நடிகையின் நாய்க்கு காய்ச்சல்"ங்குற செய்தி ரொம்ப முக்கியமா ப்ரோன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது தல.விண்வெளிக்கு நாய ராக்கெட்ல வச்சு அனுப்பினா கூட அதே ஊடகத்துல தான் ப்ரோ வருது.

"கள்ளத்தொடர்பு, கள்ளக்காதல் "செய்தி அதிகமா போடுறாங்கன்னு ஒரு குறிப்பிட்ட சேனலை  கலாய்க்குறதுண்டு ஆனா டி.ஆர்.பி ல அது தான் நம்பர் ஒன் நியூஸ் சேனல்.அப்ப நம்ப மேலையும் தான தப்பு இருக்கு.
.
.
.

#ப்ரேக்_King_News:

இப்ப கூட Spb சாவுக்காக காத்திருக்கானுங்க பாரு வெட்கமேயில்லாம என கீழே உள்ள புகைப்படத்தை பல Intellectual அறிஞர்கள் பகிர்ந்துள்ளனர்.Spb உடல்நிலை சரியில்லைன்னும் இந்த மீடியாவுல தான் வந்திச்சு.....அவருக்காக பலர் பிரார்த்தனை பண்ணியதும் இதே மீடியால தான் வந்திச்சு.....இப்ப அவர் தவறிய செய்தியும் இதே மீடியாவுல தான் வந்திச்சு..

இப்ப அத்தனை மக்களுமே Spb இறந்த செய்தியை அறிந்தவுடனே நியூஸ் சேனலுக்கு தான் போவாங்க அவர பத்தி செய்திய பார்க்க.

அந்த நேரம் நியூஸ் சேனல் Spb பத்தி போடாம அத விட முக்கியமான எந்த செய்தியை போட்டாலும் ,"என்னடா நியூஸ் போடுறானுங்க ச்சை....அங்க ஒரு மனுஷன் இறந்தத பத்தி கூட அப்டேட் இல்லை இவனுங்க என்னடா நியூஸ் சேனல் நடத்துறானுங்க அடுத்த சேனலுக்கு தாவிடுவான்".இங்க நியூஸ் சொல்றது ஒரு சேனலுக்கு எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள தக்க வச்சிக்குறதும் முக்கியம். 
.
.
.

#ஓடிஓடி_உழைக்கும்_ஊழியன்_ஊடகன்:

அதுக்காக ஊடக அறத்தை  எந்த சேனலும் மீறுவதில்லைன்னு நான் சொல்லவரலை.பொதிகை எப்படி அரசின் நலம்விரும்பியோ அதைப்போல மற்ற சேனல்களும் சில சமயங்களில் சிலரின் நலம்விரும்பிகளாக தான் இருக்க செய்கிறது.அதற்காக பொத்தம்பொதுவாக மீடியாவே இப்டி தான் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்,
ஸ்டெர்லைட் போராட்டங்கள் ஆகட்டும்
கஜா, ஒக்கி புயலாகட்டும்,
இன்றைய கொரோனா நிலவரம் வரை நம்மை தேடி செய்திகள் வருவதற்காக செய்திகளை தேடி பரபரத்து பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்லும் இதே வேசி ஊடககாரர்கள் தான்.

.
.

#மனுஷாள்_யாருக்கும்_இறக்கமில்லை:

வீட்டில் நன்றாக உட்கார்ந்து கொண்டு மத்தியான சாப்பாட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்துக்கொண்டு  கருத்து கூறியே ஆக வேண்டும் என்பதற்காக கண்டதை உலரவேண்டாம்.

உங்கள் பிரச்சனை அவர்கள் உண்மை செய்தியை கூறவில்லை என்பதா இல்லை உங்களுக்கு ஆதரவாக கூறவில்லை என்பதா? 
.
.
.
-#போலிகவிஞன்

கெட்ட வார்த்தை பேசுவோமா?

#கெட்டவார்த்தை#அறிவோம்

#பெண்கள்நம்கண்கள்:

"மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒண்ணு"என கூறுபவர்களாக இருக்கட்டும்,தான் ஆசையாய் வளர்த்த பெண்ணின் மனதை கெடுத்து(பெற்றோர்கள் நினைப்பது) மணமுடிப்பவனின் மூச்சைமுடித்து அப்பெண்ணின் வாழ்வை சீர்திருத்தும் பெற்றோர்களாகட்டும்,பெண்கள் புர்கா அணிவது தான் ஹராம் என சொல்பவர்களாகட்டும்;பெண்கள் இந்நாட்டின் கண்கள்;பெண்களே தெய்வம் என சொல்பவர்களாகட்டும். நீங்கள் சொல்வதைப்போல உண்மையிலையே பெண்களை மதிக்கிறீர்களா?
பெண்கள் புனிதமானவள் என நதிக்கு பெண்ணின் பெயர்,பூமி மாதா, இவ்வளவு ஏன் தமிழை கூட தமிழன்னை என்று தான் சொல்கிறோம்.எல்லாவற்றிலும் பெண்களை தான் முன்னிலைபடுத்துகிறோம்.அந்த பாசமோ என்னவோ  கெட்டவார்த்தைகள் அனைத்துமே பெண்களை சுற்றி மட்டுமே இருக்கிறது போல(ஆண்களை சார்ந்த கெட்ட வார்த்தைகள் சொற்பமே).

#நியூட்டனின்3ம்விதி:

மற்றவரை திட்டும் போது பெண்ணின் அந்தரங்க உறுப்பு தொடங்கி அவளின் அந்தரங்க செயல்பாடுகள் அனைத்தையும் கூறி இழிவுபடுத்துவிட்டு பெண்ணை தெய்வமாக போற்றி என்ன பயன்.இங்க மற்றொருவரை இழிவுபடுத்த நமக்கு கிடைத்த ஒரு ஆயுதம் நம் எதிரியின் மனைவி (அ) அம்மா (அ) தங்கை.அவளை கலங்கபடுத்தி பேசிவிட்டால் நீ வெற்றிபெற்றுவிடுவாயா சண்டையில்.இதே கேவலத்தை  உன் எதிரியும் உன் மீது ஏவுவான்.
பெண்ணை தெய்வமாக மதிக்கும் உன்னால், பெண்ணை தொட்டாலே வெட்டுவேன் என சொல்லும் உன்னால் ,கௌரவம்,வீரம், பாசம் என அனைத்தையும் பெண்ணை சுற்றியே கட்டமைத்துள்ள உன்னால் எப்படி பெண்ணை இப்டி இழிவுபடுத்த முடிகிறது.

#வாருங்கள்தோழிகளே:

பல ஆண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு இங்கே குறிப்பிட்ட பெயருண்டு. ஆனால் பல பெண்களுடன் செல்லும் ஆண்களுக்கு தனியே சொல்லாடல் கிடையாது.சே! இந்த ஆண்களே இப்டி தான் பெண்களை அடிமைபடுத்துறது,இழிவுபடுத்துறதே வேலை என பொங்கிவிட வேண்டாம் தோழிகளே!
ஒரு பெண்ணின் உடல் ,மன வலிகளை புரியாத ஆண் அந்த வார்த்தைகளை  பயன்படுத்துலை விட பெண்களும் அவற்றையே பயன்படுத்துவது இன்னும் மோசம்.ஆண் தமிழில் பேசும் வார்த்தைகளை நீங்கள் பண்பாடு கலாச்சாரமென நவநாகரிக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்.

#ஆஃப்லைன்பசு#ஆன்லைன்புலி:

ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தான் தீர்வாகுமே தவிர கெட்ட வார்த்தைகளல்ல.இந்த கெட்டவார்த்தை கலாச்சாரத்தை பெரிதும் வளர்த்துவிட்டதில் நம் மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு பெரும் பங்குண்டு.நேரில் பேச தயங்குபவனை கூட எளிதில் கெட்ட வார்த்தைகளை பேச வைத்தது சமூக வலைதளத்தின் வளர்ச்சி.
"நீங்க ஒரு கெட்ட வார்த்தை எக்ஸ்பர்ட்னு நினைச்சுட்டுயிருந்தீங்கன்னா  பெண்களை சாராமல் ஒரு பத்து கெட்டவார்த்தைகளை மனசுக்குள்ளே யோசிச்சு பாருங்கள் டக்குன்னு.இரண்டு மூணுக்கு மேலையே ஸ்ட்ரக்காகுது பாத்தியா.

#கடையசாத்திக்குறேன் :

என்ன தான்டா சொல்ல வர்ற, "கெட்டவார்த்தை நாங்க உள்நோக்கத்தோடெல்லாம் பேசலடா,எதோ ஃப்ரண்ட்ஸ்குள்ள ஜாலியா பேசிக்குறோம்.இதுல என்னடா இருக்கு"னு நீங்க கேட்கலாம்.இப்ப நம்ம ஃப்ரண்ட்ஸ்குள்ள பேசிக்குற பழக்கம் தான் நாளைக்கு வெளியிடத்திலும் வரும்.ஒரு நாள்ல இத நிறுத்திட முடியாது தான் ஆனா பேசுறத கொறச்சுக்க ட்ரை பண்ணலாம்ல.(என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).
.
.
.
.
.
.
.
#பி.கு:
(மேற்குரிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருந்தும்,இனி செய்ய மாட்டேன்..........செய்யமாட்டோம் என உங்கள் மீது நம்பிக்கையுடன் பதிவிடுகிறேன்)
#போலிகவிஞன்