#கெட்டவார்த்தை#அறிவோம்
#பெண்கள்நம்கண்கள்:
"மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒண்ணு"என கூறுபவர்களாக இருக்கட்டும்,தான் ஆசையாய் வளர்த்த பெண்ணின் மனதை கெடுத்து(பெற்றோர்கள் நினைப்பது) மணமுடிப்பவனின் மூச்சைமுடித்து அப்பெண்ணின் வாழ்வை சீர்திருத்தும் பெற்றோர்களாகட்டும்,பெண்கள் புர்கா அணிவது தான் ஹராம் என சொல்பவர்களாகட்டும்;பெண்கள் இந்நாட்டின் கண்கள்;பெண்களே தெய்வம் என சொல்பவர்களாகட்டும். நீங்கள் சொல்வதைப்போல உண்மையிலையே பெண்களை மதிக்கிறீர்களா?
பெண்கள் புனிதமானவள் என நதிக்கு பெண்ணின் பெயர்,பூமி மாதா, இவ்வளவு ஏன் தமிழை கூட தமிழன்னை என்று தான் சொல்கிறோம்.எல்லாவற்றிலும் பெண்களை தான் முன்னிலைபடுத்துகிறோம்.அந்த பாசமோ என்னவோ கெட்டவார்த்தைகள் அனைத்துமே பெண்களை சுற்றி மட்டுமே இருக்கிறது போல(ஆண்களை சார்ந்த கெட்ட வார்த்தைகள் சொற்பமே).
#நியூட்டனின்3ம்விதி:
மற்றவரை திட்டும் போது பெண்ணின் அந்தரங்க உறுப்பு தொடங்கி அவளின் அந்தரங்க செயல்பாடுகள் அனைத்தையும் கூறி இழிவுபடுத்துவிட்டு பெண்ணை தெய்வமாக போற்றி என்ன பயன்.இங்க மற்றொருவரை இழிவுபடுத்த நமக்கு கிடைத்த ஒரு ஆயுதம் நம் எதிரியின் மனைவி (அ) அம்மா (அ) தங்கை.அவளை கலங்கபடுத்தி பேசிவிட்டால் நீ வெற்றிபெற்றுவிடுவாயா சண்டையில்.இதே கேவலத்தை உன் எதிரியும் உன் மீது ஏவுவான்.
பெண்ணை தெய்வமாக மதிக்கும் உன்னால், பெண்ணை தொட்டாலே வெட்டுவேன் என சொல்லும் உன்னால் ,கௌரவம்,வீரம், பாசம் என அனைத்தையும் பெண்ணை சுற்றியே கட்டமைத்துள்ள உன்னால் எப்படி பெண்ணை இப்டி இழிவுபடுத்த முடிகிறது.
#வாருங்கள்தோழிகளே:
பல ஆண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு இங்கே குறிப்பிட்ட பெயருண்டு. ஆனால் பல பெண்களுடன் செல்லும் ஆண்களுக்கு தனியே சொல்லாடல் கிடையாது.சே! இந்த ஆண்களே இப்டி தான் பெண்களை அடிமைபடுத்துறது,இழிவுபடுத்துறதே வேலை என பொங்கிவிட வேண்டாம் தோழிகளே!
ஒரு பெண்ணின் உடல் ,மன வலிகளை புரியாத ஆண் அந்த வார்த்தைகளை பயன்படுத்துலை விட பெண்களும் அவற்றையே பயன்படுத்துவது இன்னும் மோசம்.ஆண் தமிழில் பேசும் வார்த்தைகளை நீங்கள் பண்பாடு கலாச்சாரமென நவநாகரிக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்.
#ஆஃப்லைன்பசு#ஆன்லைன்புலி:
ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தான் தீர்வாகுமே தவிர கெட்ட வார்த்தைகளல்ல.இந்த கெட்டவார்த்தை கலாச்சாரத்தை பெரிதும் வளர்த்துவிட்டதில் நம் மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு பெரும் பங்குண்டு.நேரில் பேச தயங்குபவனை கூட எளிதில் கெட்ட வார்த்தைகளை பேச வைத்தது சமூக வலைதளத்தின் வளர்ச்சி.
"நீங்க ஒரு கெட்ட வார்த்தை எக்ஸ்பர்ட்னு நினைச்சுட்டுயிருந்தீங்கன்னா பெண்களை சாராமல் ஒரு பத்து கெட்டவார்த்தைகளை மனசுக்குள்ளே யோசிச்சு பாருங்கள் டக்குன்னு.இரண்டு மூணுக்கு மேலையே ஸ்ட்ரக்காகுது பாத்தியா.
#கடையசாத்திக்குறேன் :
என்ன தான்டா சொல்ல வர்ற, "கெட்டவார்த்தை நாங்க உள்நோக்கத்தோடெல்லாம் பேசலடா,எதோ ஃப்ரண்ட்ஸ்குள்ள ஜாலியா பேசிக்குறோம்.இதுல என்னடா இருக்கு"னு நீங்க கேட்கலாம்.இப்ப நம்ம ஃப்ரண்ட்ஸ்குள்ள பேசிக்குற பழக்கம் தான் நாளைக்கு வெளியிடத்திலும் வரும்.ஒரு நாள்ல இத நிறுத்திட முடியாது தான் ஆனா பேசுறத கொறச்சுக்க ட்ரை பண்ணலாம்ல.(என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).
.
.
.
.
.
.
.
#பி.கு:
(மேற்குரிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருந்தும்,இனி செய்ய மாட்டேன்..........செய்யமாட்டோம் என உங்கள் மீது நம்பிக்கையுடன் பதிவிடுகிறேன்)
#போலிகவிஞன்
அருமை அண்ணா.....
ReplyDelete