Friday, March 25, 2022

காவிய காதலன் - 06. (டிஜிட்டல் காதல் தூதர்)


-

(டிஜிட்டல் காதல் தூதர்)



இன்று போல் தனியாருக்கு விற்கப்படாத ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக ரன்வேயில் கிழம்ப சத்தமெழுப்பி கொண்டிருந்த திருவள்ளுவராண்டு 2049 காலமது........



நான் அன்று என் வாழ்வின் முதல் (அ) முழுநீள மகிழிச்சி நாள் அதுமட்டுமே என அத்தனை மகிழிச்சியாக இருந்தேன்.காரணம் ஒன்றே ஒன்று தான் . என்னவள் எனதருகில் அமர்ந்திருந்தாள். கண்களை இருக மூடிக்கொண்டு முதல்முறை பறப்பதை நினைத்து பேனிக் ஆகிகொண்டுயிருந்தாள்.


முதல்முறை பயணிக்கும் எனக்கு எந்த பயமுமில்லை. ஏனெனில் அவள் என்னருகே இருந்தாள். அவள் அருகில் இருந்தால் பாராசூட்டின்றி ச்கை டைவிங் செய்யவே நான் தயார்.....(சாவுலே செத்த பயலேங்குற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது) 



சென்னையிலிருந்து ஹரியானவுக்கு செல்லும் ஏர் இந்தியா KB143 தரைதளத்திலிருந்து வானில் பறக்க ஆயத்தமாகவுள்ளது என தமிழில் ஃப்ளைட் கேப்டன் அறிவித்தார்.



.த்ரீரீரீ......டூடூடூடூ.....ஒன்.


லேசாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து சன்னல் வழியே பயந்துகொண்டே பார்த்துவிட்டு தன் முந்தைய படபட நிலைக்கு திரும்பினாள்.


தரையிலிருந்து ஆயிரமடி உயிரத்தில் KB143 பறந்துகொண்டிருக்க நானோ பத்தாயிரமடி உயரத்தில் பறந்தேன் அவள் பயத்தில் என் கைகளை இருக பற்றியிருந்ததாள். 


அவள் கைகள் மேல் என் கைகளை வைத்துக்கொண்டு, " ஏய் லூசு ! ஒண்ணுமில்லை வெளிய எட்டி பாரு " என்றேன். அவளுக்கு வெளியே பார்க்க தைரியமின்றி மூடிய கண்களுடன் என் கைக்குள்ளே அவள் கையிருக்க என் தோள்மீது சாய்ந்தாள்.


பாக்யராஜ் படங்களில் வரும் தம் தந தம் தந தா.....இளையராஜாவின் ஒட்டுமொத்த சிம்பொனிகளின்  இசை.....என காக்டெயில் லவ் வைஃப்ஸ் மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சது.
டோஃப் அடிக்காமலயே கிரங்க வைக்குற யுவன் பாட்ட கேட்ட மாதிரி என் மனசு வேற ஒரு லோகத்துல லயித்திருந்தது.


திடீர்னு கண்ண திறந்து பார்த்தா என் தோளினிள் சாய்ந்திருந்த என் உற்ற க்ரஷ் கம் காதலியை காணவில்லை. அவளமட்டுமில்ல அந்த ஃப்ளைட்ல உட்கார்ந்திருந்த அத்தனை பேரையும் காணும். சீட் பெல்ட்ட கழட்டிட்டு டக்குன்னு எந்திரிச்சு கேப்டன் அறைய நோக்கி போனேன்.


ஹலோ!! கேப்டன் சார்.. யாராச்சும் இருக்கீங்களா??என்றேன் கேப்டன் அறையை நோக்கி .






 கேப்டன் ரூமின் கதவை தட்டினேன். கதவை திறந்து என்னவள் வந்தாள். அவள் வந்தவுடன் லைட்டுகள் அனைத்தும் அணைந்து ஃப்ளைட் முழுவதும் கேண்டில்கள் ஏற்றபட்டு இருந்தது. ஃப்ளட்டே பார்க்க மஞ்சள் நிறத்தில் மின்னியது. அவளின் பின்னால் கேப்டன் மற்றும் சிப்பந்திகள் நின்றுகொண்டு ஆளுக்கொரு கையில் வயலின்,  சாக்ஸாஃபோன் சகிதம் வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத உணர்விது இசைத்துக்கொண்டுயிருந்தனர். என்னவள் நீல நிற ஏஞ்சல் டிரஸ்ஸில் எனதருகே வந்து என் கையை பிடித்து ரோஜா பூ போட்ட ஒரு கிரீட்டிங் கார்டினை கொடுத்தாள்.



என்ன நடக்குது இங்க,  இது கனவா  நினைவா என்று புரியாமல் என்ன எழுதியிருப்பாள் என ஆவலாய் அதை பிரித்தேன்.

"Jk,  YOU ARE BLOCKED" என எழுதியிருந்தது.


"வாட்?என்னது இது, ப்ளாக்கா!  என்ன ப்ளாக் ,என்றவுடன் பக்கத்தில் இருந்த எல்.ஈ.டி யில் என்னவள் என்னை ப்ளாக் செய்த ஸ்க்ரீன்ஷாட் இருந்தது.அங்குமட்டுமல்ல ஃப்ளைட்டின் அத்தனை சீட்டுகளிலுள்ள டிஸ்ப்ளேவிலும் அதே ஸ்கிரீன்ஷாட்கள்..

ஜே.கே, "என்னந்த இதெல்லாம்!" என்றேன்.

சிரித்துகொண்டே, " எஸ் யூ ஆர் ஃப்ளாக்டு சீனியர் .ஃப்ளைட் ஓட்றவங்க பேரு கேப்டன் இல்ல ஃப்ளைட்டு டா லூசுப்பபயலேன்னு சொல்லிவிட்டு ஃப்ளைட் கதவை திறந்து என்ன தள்ளிவிட்டாள்".


ஆஆஆஆஆ. ....அய்யோ..... அம்மாமாமாமாமாமா...... என கத்திக்கொண்டே கட்டிலிலிருந்து தரையில் விழுந்தேன். என்னாச்சு இப்ப ! கண்கள் ஒரு நிமிடம் அங்குமிங்கும் அலைமோதியது.


 லெஃட் சைட் வால் க்ளாக்கில் சின்ன முள் பத்திலும் பெரிய முள் ரெண்டிலும் இருந்தது.ரைட் சைடிருந்த கலைஞர் டிவியில் இந்திய தொலைக்காட்சிகயில்  முதன்முறையாக என சன் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படமான பாபநாசம் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. அடடா கனவா இது. ஆனா அது நெஜமாயிருக்கலாம். என்னதான் அவ ஃப்ளைட்லயிருந்து தள்ளி விட்டிருந்தாலும் அவகூட அவ்ளோ நெருக்கமான பயணம் அமைஞ்சிருக்காதுல.


அன்னைக்கு 
அவ ப்ளாக் பண்ணவுடனே செம டென்சன் ஆகிட்டேன். உனக்கென்ன அவ்ளோ திமிரு. ப்ளாக் தானே !  பண்ணிட்டு போ என அவளை திட்டிக்கொண்டே என் நண்பன் விஷ்வா பாயை கூட்டிகொண்டு சண்முகம் அண்ண கடைக்கு டீ குடிக்க கெழம்பிட்டேன்.



 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை  விட உக்கிரமா பாதிக்கப்பட்ட கடலூரின் மீது மக்களின் பரிதவிப்போ கடைகண் பார்வையோ படாமலும் ;  வாட்ஸ்அப் கருப்பு டிபிகளும் மாற்றப்படாமல் அந்த டிசம்பர் கழிந்தது.


ப்ளாக் பண்ணின இந்த ரெண்டு மாசத்துல ரொம்ப கவலைலாம் நான்  படல.ஏன்னா அவ நெனைப்பே எனக்கு வராதபடி பேத்தாலஜி( Pathology) ரெக்கார்டும் ஹெர்பேரியம் (herbarium) கலெக்சனும் என்னை வாட்டி வதைத்துகொண்டிருந்தது. 



நேத்து நைட் தூங்கறதுக்கு முன்னாடி கூட அவள பத்தி நம்ப நினைக்கலையே. அப்புறம் எப்டி அவ நம்ப கனவுல வந்தா! அப்ப நம்ப ஆழ்மனைசுல எதோ ஓர் ஓரத்துல கருவேலமரத்த போல வேரூன்றிட்டா போல.




என் கனவுல முதன்முதலா என் ஸ்கூல் க்ரஷ் சிந்துக்குப்புறம் வந்தது இவதான். என்னது ஸ்கூல் க்ரஷ்ஷா ! உனக்கு எத்தனை க்ரஷ் தான் இருக்காங்க என நினைக்க வேணாம். நமக்கு புடிச்சு போய் நம்பளால காதலியாக்கா முடியாத  அத்தனை பொண்ணுங்களுமே க்ரஷ் தான்.



சிந்து கடைசியா பதினோன்னாவது படிக்கும்போது என் கனவுல வந்து கௌரவ தோற்றம் பண்ணிட்டு போனாங்க. இப்ப இவ ஏன் கனவுல வந்தா!  நிஜமாகவே நமக்கு காதலிருக்கோ அவ மேல.! கனவுல வரவங்கள தான் காதலிக்கணும்னா நான் ஸ்டெம்பர் பாலை தான் காதலிக்கணும். ஏன்னா எனக்கு வாழ்கையுல இதுவரை அதிகமா வந்த கனவு ஸ்டெம்பர்  பால் கிடைக்கற கனவு தான்.


சரி ! இருந்தாலும் கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்காலாமே.  ஏன்னா முயற்சி திருவினையாக்கும்னு நம்ப டோராவே சுட்டி டிவியில சொல்லியிருக்காங்களே! 


அவளுக்கு நார்மல் டெக்ஸ்ட் மெசேஜ் பண்ணேன். ரிசீவ்டுன்னு காட்டிச்சு ஆனா பத்து நிமிசத்துக்கு மேல ரிப்ளே வர்ல. ! !


கம்பெனி நோட்டிஃபிகேசன் மெசேஜ்னு நெனைச்சு பார்க்காம விட்ருப்பாலோ! 

நம்ப காதலா (அ) வெறும் க்ரஷ்ஷான்னு தெரியாத அந்த இனம்புரியா இன்புமூட்டூம் செயலுக்கு நமக்க உதவ யாருமேயில்லையா என நினைக்குறப்ப தான் டேபிள்ல இருந்த உண்டியலை சன்னல் ஸ்கிரீன் காற்றின் மிகுதியால் தூக்கி ஒரு ஸ்மாக் (Smack) போட்டிச்சு தரையில. அதிலயிருந்த காசெல்லாம் சண்டேஸ்ல நகராட்சி கிரவுண்டுல எது நம்ப பந்துன்னே கேட்ச் பிடிக்க ஓடுற ஃபீல்டர்ஸை போல குறுக்கையும் மறுக்கையும் சிதறிட்டுயிருந்திச்சு. என்கால் கட்டைவிரல ஒரு ஒரு ரூபாய் ஃபீல்டர் வந்தடைந்தார்.


 பெரிய பெரிய நிறுவனங்களே ஒரு ஒத்த ரூபாயில பல கோடி டெண்டர்களை இழந்த வரலாறு உண்டு. கல்யாணத்துல கோடி ரூபாய் மொய் வச்சாக்கூட டாப்ல உக்கார்றது ஒரு கோடியே ஒண்ணாகிய இந்த ஒரு ரூபாய் தான். அப்படிபட்ட ஒரு ரூபாயையே நமக்கான தூது புறாவாக பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணேன்.


கூகுள் பே (G-Pay)ல் அவ நம்பருக்கு 1 ரூபா அனுப்பிட்டு "ஹாய்" சொன்னேன்.

"என்ன ?" என ரிப்ளே செய்தாள் ஃபேஸ்புக்ல.


அந்த என்ன என்பது கோபமா சொன்ன என்னவா இல்ல கேசுவலா சொன்ன என்னன்னு தெர்லையே. சரி ஃபோன் பேசுனா நல்லா இருக்குமே" என நினைத்தேன்.


"எமர்ஜெசி ! கால் ப்ளீஸ் " என்றேன்.


அடுத்த கன நொடியே 
சிறு சிறு உறவுகள் பிரிவது பாடல் என் மொபைலில் ஒலித்தது...அவளே தான்.அட்டெண்ட் செய்தவுடன்," என்ன வேணும் உனக்கிப்போ " என்றாள் சிடுசிடுப்பாக.



"ஒண்ணுமில்ல சும்மா தான். பேசக்கூடாதா என்ன" என்றேன்.

" இங்க பாரு புரிஞ்சிக்க, தயவுசெய்து நீயும் இத மாதிரி தொல்லை பண்ணாதே ! ஏற்கனவே இங்க ஒருத்தன் டார்ச்சர் பண்றான் "என்றாள் .


" யாரு டார்ச்சா பண்ற அங்க,  என்னாச்சு " என்றேன்.


" எங்க காலேஜ் சீனியர் ஒருத்தன் என்னைய காலேஜ்லயிருந்து சந்திரம் பஸ் ஸ்டாண்டு வரை பின்னாடியே ஃபாலோ பண்ணி வர்றான். கையில ஒரு ரோஸ், கிரீட்டிங் கார்டு வேற வச்சிருக்கான்.போக சொன்னாலும் போக மாட்றான் " என்றாள் வழக்கமான அவளின் பரிதவிப்பான குரலில்.




என்ன தான் அவ என்னைய ப்ளாக் பண்ணினாலும் அவ இப்டி பேசுனவுடனே எனக்கு மனசு கேக்கல.


"ஏய் எதுக்கு பதற்ர , வீரத்த உலகத்துக்கே பாட்டுல சொன்ன முண்டாசு கவியோட பேர வச்சுக்கிட்டு பயப்படலாமா" என்றேன்.


" சுட்சுவேசனை ஃபேஸ் பண்றவங்களுக்கு தான் தெரியும் கஷ்டம் என்னன்னு " என்றாள்.


" சரி நான் சொல்றத கொஞ்சம் கேளேன் "என்றேன்.


" ஒரு இம்சைகிட்டயிருந்து தப்பிக்க இன்னொரு இம்சை ஹெல்ப் பண்ண போகுதாக்கும் " என்றாள்.


இவ்ளோ டென்சன்லையும் இவ கொழுப்பு மட்டும் குறையலையே. அது சரி அழகாயிருந்தா திமிரும் கூடவே இருக்கும் போல என மனசுல நெனச்சுக்கிட்டேன்.


" ஃபோன் பேசுற இம்சையவிட நேர்ல இருக்க இம்சை பரவாயில்லையா அப்போ" என்றேன்.



"சரி , சாரி சாரி என்னன்னு சொல்லுப்பா " என்றாள்.


அடடா திமிரு பிடிச்சவள்லாம் இல்ல . சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டாளே , தன்மையானவள் தான்.


"சந்திரம் பஸ் ஸ்டாண்டுல எந்த இடத்துல இருக்க "என்றேன்.


" இந்திரா காந்தி காலேஜ் பக்கத்துல நிக்குறேன் " என்றாள்.


" பக்கத்துல பெரியசாமி டவர்னு ஒரு பில்டிங் இருக்கும் . அதுக்குள் போ "என்றேன்.


"அது எங்க இருக்குன்னு எனக்கெப்புடி தெரியும் "என்றாள்.

" காலேஜ் படிக்குற ஊர்ல உள்ள இடத்த தெரிஞ்சு வச்சிக்கமாட்டியா. பக்கத்துல யார்ட்டையாச்சும் கேட்டுட்டு போமா" என்றேன்.


"ஆங் வந்துட்டேன் "


" ஃபர்ஸ்ட்  ஃப்ளோர்ல ஒரு ப்ரௌசிங் சென்டர் ஒண்ணு இருக்கும் பார்ரு, அதுக்குள்ள போ "


" ஏன் உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா இங்க....ஆங் போயிட்டேன் " என்றாள்.


" அவன் பின்னாடி வர்றானா என்ன" என்றேன்.


"இல்ல வெளில தான் நிக்கிறான்.எப்டியும் இன்னும் நான் அரைமணி நேரத்துல இங்கயிருந்து சென்ட்ரலுக்கு போனாதான் வேதாரண்யம் போற 108B புடிக்க முடியும்" என்றாள்.

"பொங்கல் லீவுக்கு இப்ப தான் கெழம்புறியா? நான் நேத்தே ஊருக்கு வந்துட்டேன்.பஸ் கூட்டமா இருக்குமே" என்றேன்.


" டேய்,  ஐடியா சொல்றா,  என்றாள். "


எனக்கு "டா" சொன்னா பிடிக்காதுன்னு சொல்லியிருக்கேன்ல"என்றேன் .


" சரி, சொல்லுங்க சார் ,ப்ளீஸ் " 


"அங்க கேபின் நம்பர் 10 க்கு பின்னாடி போ ய் பாரு.கொஞ்ம் மறைவா இரு எக்சிட் டோர் ஒண்ணு இருக்கும்.அதுல போய் ரோடு வந்தவுடனே ரைட் சைட் போ வேகமா, தெப்பகுளம் வரும்" என்றேன் ..


"  என் பேச்சை முதன் முதலா தட்டாம கேட்டுக்கிட்டே வேக வேகமா நடந்தாள் " 


"பின்னாடி வர்றானா என்ன? "என்றேன்.


" இல்லயில்ல,  நீ சீக்கிரம் சொல்லு அடுத்து என்ன பண்ண சொல்லு " 


"தெப்பக்குளம் பக்கத்துல அம்மா மெஸ்னு ஒரு பரோட்டா கடை இருக்கு பாத்தியா" 


"ஆமா இருக்கு " என்றாள்.


"நல்லாயிருக்கும் புரோட்டோ, ரெண்டு பார்சல் வாங்கிட்டு போயேன் " என்றேன்.


"ஏய்ய் கடுப்பேத்தாதே " என்றாள்.


"அம்மா மெஸ் தாண்டி நேரே போய் லெஃப்ட் எடுத்து ரைட்டு எடு,  செயிண்ட் ஜோசப் சர்ச் தெரியும் பாரு. சர்ச் வந்தவுடனே கொஞ்சதூரம் லெஃப்ட்ல நடந்து போனா மலைகோட்டை கேட் இருக்கும் , வாசல்ல போலீஸ் நிப்பாங்க எப்பையுமே. அங்க சிக்னல் இருக்கும் அதுல பஸ் ஏறிக்கோ" என்றேன்.


பண்ணன்டாவது முடிஞ்சுப்புட்டு ரெண்டு மாசம் கேர்ல நீட் கோச்சிங்குர பேர்ல திருச்சிய சுத்துனதுக்கு இன்னைக்கு தான் முழு  பலனைட்ஞ்சேன்.

" பஸ் வந்திடிச்சு நான் அப்புறம் கூப்பிடுறேன்னு கட் பண்ணிட்டா"


சரின்னுட்டு சும்மா ஃபேஸ்புக்ல "Scroll down without liking this posts" மீம்களை சுவைப் அப் பண்ணி கொண்டிருந்தேன்.

"Your account credited with Rupees 1 "என மெசேஜ் வந்திருந்தது.அதை தொடர்ந்து
கூகுள் பேவில்  ஒரு மெசேஜ் வந்திருந்தது "$Orry" என்று.


அவள் தான் .டிஜிட்டல் இந்தியா நல்லா இருக்கிறதே !


மறுபடியும் ஒரு மெசேஜ் ," Thnks " என்று.இம்முறை வாட்ஸ்அப்பில்.


காணாமல் போன அவளது வாட்ஸ்அப் டிபியில் ஒரு நீல நிற பட்டாம்பூச்சி இருந்தது.


ஒரு பூ பூத்துதான் ஆகும் ,

மேகம் மழையினை பொழிய தானே செய்யும் ;

2:30 மணிக்கு 108B ல் ஏறிய பின் கிழம்பிட்டேன் என அதே கூகுள் பே (G - pay)வில் மெசேஜ் அனுப்பினாள்.

அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு  திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரியார் சிலைக்கு அருகில் காத்திருந்தேன்.


5 மணிக்கு வர வேண்டிய பஸ் 6 மணியாகியும் வரல.

"எங்க இருக்க," என்றேன்.

" கரியாப்ட்டிணம் தாண்டி போயிட்டுயிருக்கேன்"என்றாள்.

"என்னது! கரியாப்பட்டிணமா, திருத்துறைப்பூண்டிகுள்ள பஸ் வந்திச்சா இல்லையா" என்றேன்.


இல்ல டிக்கெட் எல்லாமே வேதாரண்யம் தானா,  பஸ் ஃபுல்லாயுடிச்சுன்னு பஸ் ஸ்டாண்டுக்கு வராமா பழைய பஸ் ஸ்டாண்டோட திரும்பிட்டோம் " என்றாள்.


" ஓ ! என்றேன் உச்சகட்ட ஏமாற்றத்துடன் " 

" பஸ் வர்றாதது உனக்கு எப்டி தெரியும் " என்றாள்.

"ஒண்ணுமில்ல!  சும்மா கேட்டேன்,  ஹாப்பி ஹாலிடேஸ் "ன்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ணிட்டேன்.

இந்த லக்குங்குறது  எல்லாம் எப்பையுமே நமக்கு இருக்காதுபோல என்ற சோகத்துடன் பாஸ்கர் அண்ண கடைக்கு டீ குடிக்க கிழம்பினேன்.

புது பஸ் ஸ்டாண்டிற்கும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கும் இருக்கும் அரை கிலோமீட்டர் தூரத்தில் என்னவளை தவறவிட்டேன்.


 " உப்பு காற்றில் நீ இருக்க 
    உன் சுவாசமாய் நானிங்கே 
தொலைந்தும் தொலையாமலும் "
                              
                         - போலி கவிஞன்.

 









காவிய காதலன் - 01





                 காவியகாதலன் #01

(Jkவும் 😎வும் துறைமுகத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்)


😎: எந்த தைரியத்துல நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ற


Jk: இதுக்கு எதுக்கு தைரியம்...தோணிச்சு...அப்புறம் ஆசை....உன்கிட்ட சொல்ல...


😎: நீ யூடியூப்ல டிவியுல நடிக்குறத பார்த்து நான் இம்ப்ரஸ் ஆகி உனக்கு ஓக்கே சொல்வேன்னு நெனச்சியா??


Jk: என்னதே லூசு மாதிரி பேசுற?


😎: Dont cross ur limits


Jk: ஆமா ஆமா.... க்ராஸ் பண்ணிட்டாலும்?


😎: என்ன?


Jk: ஒண்ணு புடிக்குதுன்னு சொல்லு இல்ல... புடிக்கலைன்னு சொல்லு....


😎: எனக்கு உன்னைய புடிக்கவும் இல்லை பிடிக்காமலும் இல்ல...எனக்கு நீ வேணாம்....ஐ மீன் இது எதுவுமே வேணாம்... புரியுதா?


 Jk: அதான் ஏன்?

 
😎: ஏன்னா....தெர்ல!அப்புறம் எங்க வீட்ல என்ன பத்தி என்ன நினைப்பாங்க.


Jk: அவங்க நினைக்குறது இருக்கட்டும் நீ என்ன பத்தி என்ன நினைக்குற?


😎:உன்ன பத்தி நினைக்க எனக்கு ஒண்ணுமில்லை...


Jk: கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே...


😎: இப்டி கெஞ்சுறியே வெட்கமாயில்லை??


Jk: திருடுறது,பொய் சொல்றது,கெஞ்சுறது இது மூணுமே பிடிக்காது எனக்கு...ஆனா கடைசி ரெண்டையும் நம்ம காதலுக்காகநான் பண்ணிருக்கேன்.


😎: Sorry...நம்ம காதலா??(முறைக்கிறாள்)


Jk: சரி என் காதல்(ம்ம்ம் என முறைக்கிறாள்)...சரி காதல் இல்ல ....ஒன் சைடடு க்ரஷ்னு வச்சிக்கலாலாமா...


😎: இந்த வார்த்தையெல்லாம் எங்கிருந்து தான் க்ரியேட் பண்றீங்களோ....


Jk: Love பண்ணி பாருங்க Oxford dictonary ல இருக்கறதவிட ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும்....


😎: அதுகெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்டும் இல்ல நேரமும் இல்ல.....இந்தா ...எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.....இதகொடுக்க தான் உன்னைய மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்...நீ என்னடானா சம்பந்த சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு இருக்க????


Jk: லாஸ்டா ஒரே ஒரு சேன்ஸ் கொடேன்...இந்த ரெண்டு மாசம் பேசிபழகி பார்ப்போம்....அதுக்கு அப்புறமா ஒரு முடிவ சொல்லு.....


😎: டேய்... எனக்கு நிச்சியதார்த்தமே முடிஞ்சிருச்சுடா?


Jk: கல்யாணம் ஆகலையே இன்னும்..இனி கூட உன் மனசுமாற வாய்ப்பிருக்கே


😎: என்ன ரெமோ படம் பாத்தியா நைட்டு .....கிறுக்குத்தனமா பேசிக்கிட்டு இருக்க...


Jk: உன்ன மீட் பண்ண வந்ததுனால இந்த 20 ரூபாய் பத்திரிக்கையும் 50 ரூபாய் பெட்ரோலும் வீணாபோனதும் தான் மிச்சம்...


😎: (கிளம்புகிறாள்)

 Jk: Oru nimisham...(இந்தா என ஒரு புக்கை ப்ரசெண்ட் செய்கிறான்....)

 
😎:(பிரித்துபார்த்துவிட்டு)என்னது இது??


 Jk:ராவணகாவியம்.நாம எல்லாருக்கும் சீதைய கொடும படுத்துன ராவணன தான் தெரியும் ராமாயணத்தால..சீதைய எப்டி பாத்துக்கிட்டான்னு இந்த ராவணகாவியத்துல இருக்கும்....டைம் இருந்தா படி.....
"ஓ நீ ராவணன்,என் புருஷன் ராமனா??"


Jk :புருஷனா ....அதுக்குல்லையா????அவன் ராமனோ இல்ல ராவணனோ தெர்ல... எனக்கு நீ எப்பையுமே சீதா தான்.....

😎:(பத்திரிக்கையை கொடுத்துவிட்டு Scooty zest ல் மினியான் பொம்மை போட்ட கீ செய்னை எடுத்து சொருகி......கிர்ர்ர்ர்ர்ர் என ஸ்டார்ட் செய்கிறாள்.....)

Jk:(வெறுமையொடு பார்க்கிறான்)

                (தொடரும்...........)

Friday, February 18, 2022

மதுரைகாரர்கள் அரிவாளோட தான் இருப்பாங்களா என்ன?

சன்டே அதுவுமா சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி மேட்ச் பார்க்குற கேப்ல ரீமோட்டை எடுத்து சும்மா சேனல் சுற்றுலா ஒண்ணு போயிக்கிட்டுயிருந்தேன்.
.
.
.
ஜீ தமிழ்ல கொடி வீரன், சன் டிவி ல கொம்பன்னு ஒரே முத்தையா அண்ணேனோட படங்கள்லாக இருக்கு.இந்த ரெண்டு படம் மற்றும் இந்த 

முத்துராமலிங்கம்,
மருது
குட்டி புலி 
போன்ற பல படங்கள் மதுரையை பெருமை படுத்துதுன்னு நீங்க நினைச்சா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்வேன்.
.
.
.
.

இப்ப மட்டுமில்ல தமிழ் சினிமாவுல ஆண்டாண்டுகளாகவே மதுரைய ஒரு கலவர பூமியை போல தான் காட்சிபடுத்திக்கிட்டு வர்றாங்க.

கே.ஜி.எப் இன்ட்ரவல் ப்ளாக்குல கருடன் வர்றப்ப வேலைகாரனுங்க, டிரைவர்,கட்சி காரனுங்கன்னு எல்லாரும் துப்பாக்கிய எடுத்து நீட்டுவானுங்க அந்த மாதிரி மதுரையுல எல்லாரும் அரிவா ,கத்தியோட எடுத்து நீட்டுவானுங்க போல தான்னு நானும் நெனைச்சுக்கிட்டு இருந்தேன் 2014 வரைக்குமே.

.
.
.
ஏன்னா 2014 ல தான் நான் முதன்முறையா மதுரைக்கு போறேன் .குஜராத் மாடல்னு சொல்லி இந்தியாவையே ஏமாத்துன மாதிரி மதுரைன்னா இப்டி தான் Raw வா இருக்கும்னு  இத்தன  வருஷமா தமிழ் சினிமா நம்பள ஏமாத்தி வச்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
.
.
.
நான் பார்த்த வரைக்கும் பேச்சுல தெனவாட்டு தெரிஞ்சாலும் தெரியாத முகத்துக்கு கூட உதவி செய்யுற மனசு மதுரக்காரங்களுக்கு இயல்பாகவே இருக்கு..
மதுரைக்குன்னு ஒரு எதார்த்த அழகியல் இருக்கு. அத கரெக்ட்டா குள்ள நரி கூட்டத்துல காமிச்சிருப்பாங்க.

.
.
.
.

முத்தையா படங்கள்ல வர்ற மதுரை சார்ந்த ஹீரோக்கள் 

மூட்டை தூக்குவது;

முழு நேர கட்டபஞ்சாயத்து ;

சும்மாவே திண்ணையில் தூங்குவது போன்ற வேலைகளை தான் பிராதனமா பண்ணுறார்..
இல்ல வாய்தாவுக்காக கோர்ட் வாசலில் நிற்கிறார்.!

முட்டை தூக்குறது என்ன கேவலமா போச்சா என தூக்கிட்டு வர வேணாம்.படிச்ச ஒருத்தனை கதாநாயகனா காட்டுனா அது பார்க்குறவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா அமையும் நாமளும் படிக்கனும்னு.

.
..
.

எனக்கு இருக்க முக்காவாசி ஃப்ரண்ட்ஸ் மதுரக்காரனுங்க தான்.அதுல 
நிறைய 

டாக்டர்ஸ் இருக்கானுங்க,

நிறைய பிஎச்டி ஸ்காலர்ஸ் இருக்கானுங்க,

நிறைய ஐ.டி டியூட்ஸ் இருக்கானுங்க.

வெளிநாட்டுல பெரிய வேலையுல நிறைய பேர் இருக்கானுங்க..

இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா முத்தையா டியூட்.

எல்லா படத்துலையுமே ஹீரோ அநியாத்தை தட்டி கேட்கும் நபராக சட்டத்தை தன் கையில் எடுக்கிறார் அவர் சட்டம் பயின்றவராக இருந்தாலும் கூட!
ஏன்பா பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ்ன்னு அவங்களுக்கு ஒரு டிரைக்டர் இருக்குறப்போ எங்களுக்கு முத்தையா போல ஒரு டிரைக்டர் இருக்க கூடாதுன்னு கேட்குறீங்க...
.
.
.
.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படத்துல உங்க அவமானப்படுத்துறதா நீங்களே நினைச்சுக்குறத விட அதிக அளவு ஒரு மோசமான பிம்பத்தை முத்தையா அன் கோ போன்ற டிரைக்டர்ஸ் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
சீக்கிரம் அத முதல்ல எதிர்த்து பேசுங்க மை டியர் மதுரை ஃப்ரண்ட்ஸ்.

                        - போலிகவிஞன் (25/4/21)

எங்கள் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்

ஒரு கட்டுரைய எப்டி ஸ்டார்ட் பண்றதுன்னு இன்னும் ஒரு தெளிவில்லாமலையே இத எழுத ஸ்டார்ட் பண்றேன்.....தெளிவில்லாதது தொடக்கத்துல தான் மையக்கருல இல்ல!
.
.
.
.
ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்க ப்ரொஃபைல்குள்ள போய் எந்த ஸ்கூல், காலேஜ்ல படிச்சாங்கன்னு பார்த்தா முக்காவாசிக்கு மேல தூய, புனித ங்குற பேர்ல ஆரம்பிக்குற கிரிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன்ல தான் படிச்சிருப்போம். எனக்கு தெரிஞ்சு எந்த ஸ்கூல்,காலேஜ்களிலும் ஒரு மதத்துக்கு மட்டும் ஆதரவா நடந்துக்கிட்டதில்லை..
.
.
.
.
உதாரணத்துக்கு எங்க ஊர்ல நான் படிச்ச ரெண்டு ஸ்கூலுமே கிருஸ்தவ பள்ளி தான்.அதுலையும் ஆண்டனிஸ் ஸ்கூல்ல வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தனியா ஆடிட்டோரியமே இருக்கும்.
நானும் தினுமும் திருநீர் வச்சிட்டு தான் ஸ்கூலுக்கு போவேன்.எங்க ஸ்கூல்ல இருக்க அந்த அந்தோணியார் பள்ளிங்குறது வெறும் பேர் தான் அசோக், அக்பர் போல.வெறும் பேரா தான் நாங்க பார்த்தோம், பார்க்கவும் சொல்லி கொடுத்திருக்காங்க.
.
.
.
.
திருத்துறைப்பூண்டியில பிறந்திருந்தா St.theresas school ல கண்டிப்பா ப்ரைமரி க்ளாஸ்லையோ, ஹையர் செகண்ட்ரிலியோ படிச்ச ஒரு பிள்ளைங்களாச்சும் எங்க ஒவ்வொருத்தங்க வீட்டுலையும் இருப்பாங்க. இவ்ளோ ஏன் எங்க அம்மா,  அக்கா முதகொண்டு என்னோட க்ரஷ் வரைக்கும் எல்லாரும் படிச்சது, படிச்சிட்டு இருக்கது தெரசாஸ்ல தான்.
.
.
.
எங்களை கட்டாயப்படுத்திருக்காங்க இந்த பள்ளிகள்ல பலமுறை....

ஒழுங்கா படிக்க சொல்லி....
ஒழுக்கமா படிக்க சொல்லி.....
மதவெறி பிடிச்சவனாக இருக்காதேன்னு சொல்லி......
ஆனா இந்த மாதிரி கட்டாயப்படுத்துதல் கட்டாயம் தேவை தானே.

இப்ப என்ன சொல்ல வந்தேன்னா எங்க ஊர்ல மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டுலையும் ஏன் இந்தியாவுல கூட தலைமுறை தலைமுறையா படிக்க வச்சு முன்னேத்துனது இந்த மாதிரி கிறிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன் தான். 

அவங்க மேல சும்மா பொத்தம் பொதுவா ஒரு பழிய தூக்கி போட்டுட்டு போயிட்டு இருக்கானுங்க.இந்த பள்ளி , கல்லூரிகள்ல படிச்ச நீங்களே அமைதியா இருந்தா நாளைக்கு கர்நாடகாவுல நடந்த மாதிரி நம்ப பிள்ளைங்களும் காவி துண்ட போட்டுக்கிட்டு கலவரம் பண்ணிட்டு நிப்பான்.

கல்விய கொடுத்து மதமாத்துறாங்கன்னு கதரும் தேசியவாதிகளே. நீங்கள் ஏன் இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் திறந்து படிக்க வைக்க கூடாது. என்றும் இத செய்ய மாட்டீங்க ஏன்னா நமக்கு தேவை கல்வியாளர்கள் அல்ல கலவரகாரர்களே!

#Sanghis_are_injurious_to_humans
                      
     - போலி கவிஞன்

Friday, June 11, 2021

மீடியா செய்வது சரியா?

"ஏ வேசி ஊடகமே!!"
.
.
.

"ஏய் மானங்கெட்ட ஊடகமே!!!"
.
..
.
"பொதிகையில் செய்தி பார்த்த காலங்கள் என்ன அலாதி"யானவை தெரியுமா என பல கொரோனா காலத்து ஃபேஸ்புக் போராளிகள் பதிவிட்டு வருகின்றனர் தொடர்ந்து.
.
.
.
#அண்டா__திருட்டு__முதல்____அண்டார்டிக்காவரை:

ஊடகத்தின் பிரதானமான வேலை நியூஸ் ப்ரேக் பண்றது தான்.அந்த நியூஸ் நல்ல செய்தியாவோ கெட்ட செய்தியாவோ இருக்குறது அவங்க கையில இல்ல.

"புயல் காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதும் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு"ங்குறது மட்டும் செய்தி இல்லை.அமேசன்ல வர காட்டு தீ முதற்கொண்டு  ஆண்டிப்பட்டில யாரோ ரெண்டு பேருக்கு இடையில நடக்குற வேலி தகராறு வரை எல்லாமே நியூஸ் தான்.அதுல உங்களுக்கு எது முக்கியமோ அத எடுத்துக்கோங்க.
.
.
.

#அமைதி_பூங்காவாம்_தமிழகம்:

முன்னாடி பொதிகை இருந்த காலத்துல அவனுங்க சொல்ற அந்த அரைமணிநேரம் மட்டும் தான் செய்தியா?அதை தாண்டி வேற எதுவுமே உலகத்துல நடக்கலையா?இன்னைக்கு சூழ்நிலையில ஒரு செய்தி பலதரப்பட்ட கோணங்கள்ல பரப்ப படுது. 

அதுல உண்மை எல்லார்கிட்டையும் போய் சேர்ற நல்லதும் இருக்கும் ஒரு தரப்பு நியாயம் மட்டுமே போய் சேர்ற கெட்டதும் இருக்கு.
ஆனா பொதிகை இருந்த காலத்துல அரசுக்கு எதிரா எந்த கருத்தாச்சும் சொல்லி நியூஸ் வெளியிட்ற முடியுமா?
(இப்புவுள்ள செய்தி நிறுவனங்களை கட்சிகள் கைக்குள் போட்டு கொண்டது வேற கதை)
.
.
.

#புடிச்சது_எடுத்துக்கோ:

விதவிதமா ரகரகமா பிரிச்சு பிரிச்சு நியூஸ் போடுறானுங்க
விளையாட்டு,
சினிமா,
அரசியல்,
க்ரைம்,
உள்ளூர்,
வெளிமாநிலம்,
வெளிநாடு ,
ஏன் விண்வெளின்னு ஸ்லாட்டு ஒதுக்கி நியூஸ் போடுறானுங்க.

"ஒரு நடிகையின் நாய்க்கு காய்ச்சல்"ங்குற செய்தி ரொம்ப முக்கியமா ப்ரோன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது தல.விண்வெளிக்கு நாய ராக்கெட்ல வச்சு அனுப்பினா கூட அதே ஊடகத்துல தான் ப்ரோ வருது.

"கள்ளத்தொடர்பு, கள்ளக்காதல் "செய்தி அதிகமா போடுறாங்கன்னு ஒரு குறிப்பிட்ட சேனலை  கலாய்க்குறதுண்டு ஆனா டி.ஆர்.பி ல அது தான் நம்பர் ஒன் நியூஸ் சேனல்.அப்ப நம்ப மேலையும் தான தப்பு இருக்கு.
.
.
.

#ப்ரேக்_King_News:

இப்ப கூட Spb சாவுக்காக காத்திருக்கானுங்க பாரு வெட்கமேயில்லாம என கீழே உள்ள புகைப்படத்தை பல Intellectual அறிஞர்கள் பகிர்ந்துள்ளனர்.Spb உடல்நிலை சரியில்லைன்னும் இந்த மீடியாவுல தான் வந்திச்சு.....அவருக்காக பலர் பிரார்த்தனை பண்ணியதும் இதே மீடியால தான் வந்திச்சு.....இப்ப அவர் தவறிய செய்தியும் இதே மீடியாவுல தான் வந்திச்சு..

இப்ப அத்தனை மக்களுமே Spb இறந்த செய்தியை அறிந்தவுடனே நியூஸ் சேனலுக்கு தான் போவாங்க அவர பத்தி செய்திய பார்க்க.

அந்த நேரம் நியூஸ் சேனல் Spb பத்தி போடாம அத விட முக்கியமான எந்த செய்தியை போட்டாலும் ,"என்னடா நியூஸ் போடுறானுங்க ச்சை....அங்க ஒரு மனுஷன் இறந்தத பத்தி கூட அப்டேட் இல்லை இவனுங்க என்னடா நியூஸ் சேனல் நடத்துறானுங்க அடுத்த சேனலுக்கு தாவிடுவான்".இங்க நியூஸ் சொல்றது ஒரு சேனலுக்கு எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள தக்க வச்சிக்குறதும் முக்கியம். 
.
.
.

#ஓடிஓடி_உழைக்கும்_ஊழியன்_ஊடகன்:

அதுக்காக ஊடக அறத்தை  எந்த சேனலும் மீறுவதில்லைன்னு நான் சொல்லவரலை.பொதிகை எப்படி அரசின் நலம்விரும்பியோ அதைப்போல மற்ற சேனல்களும் சில சமயங்களில் சிலரின் நலம்விரும்பிகளாக தான் இருக்க செய்கிறது.அதற்காக பொத்தம்பொதுவாக மீடியாவே இப்டி தான் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்,
ஸ்டெர்லைட் போராட்டங்கள் ஆகட்டும்
கஜா, ஒக்கி புயலாகட்டும்,
இன்றைய கொரோனா நிலவரம் வரை நம்மை தேடி செய்திகள் வருவதற்காக செய்திகளை தேடி பரபரத்து பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்லும் இதே வேசி ஊடககாரர்கள் தான்.

.
.

#மனுஷாள்_யாருக்கும்_இறக்கமில்லை:

வீட்டில் நன்றாக உட்கார்ந்து கொண்டு மத்தியான சாப்பாட்ட சாப்பிட்டு மல்லாக்க படுத்துக்கொண்டு  கருத்து கூறியே ஆக வேண்டும் என்பதற்காக கண்டதை உலரவேண்டாம்.

உங்கள் பிரச்சனை அவர்கள் உண்மை செய்தியை கூறவில்லை என்பதா இல்லை உங்களுக்கு ஆதரவாக கூறவில்லை என்பதா? 
.
.
.
-#போலிகவிஞன்

கெட்ட வார்த்தை பேசுவோமா?

#கெட்டவார்த்தை#அறிவோம்

#பெண்கள்நம்கண்கள்:

"மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒண்ணு"என கூறுபவர்களாக இருக்கட்டும்,தான் ஆசையாய் வளர்த்த பெண்ணின் மனதை கெடுத்து(பெற்றோர்கள் நினைப்பது) மணமுடிப்பவனின் மூச்சைமுடித்து அப்பெண்ணின் வாழ்வை சீர்திருத்தும் பெற்றோர்களாகட்டும்,பெண்கள் புர்கா அணிவது தான் ஹராம் என சொல்பவர்களாகட்டும்;பெண்கள் இந்நாட்டின் கண்கள்;பெண்களே தெய்வம் என சொல்பவர்களாகட்டும். நீங்கள் சொல்வதைப்போல உண்மையிலையே பெண்களை மதிக்கிறீர்களா?
பெண்கள் புனிதமானவள் என நதிக்கு பெண்ணின் பெயர்,பூமி மாதா, இவ்வளவு ஏன் தமிழை கூட தமிழன்னை என்று தான் சொல்கிறோம்.எல்லாவற்றிலும் பெண்களை தான் முன்னிலைபடுத்துகிறோம்.அந்த பாசமோ என்னவோ  கெட்டவார்த்தைகள் அனைத்துமே பெண்களை சுற்றி மட்டுமே இருக்கிறது போல(ஆண்களை சார்ந்த கெட்ட வார்த்தைகள் சொற்பமே).

#நியூட்டனின்3ம்விதி:

மற்றவரை திட்டும் போது பெண்ணின் அந்தரங்க உறுப்பு தொடங்கி அவளின் அந்தரங்க செயல்பாடுகள் அனைத்தையும் கூறி இழிவுபடுத்துவிட்டு பெண்ணை தெய்வமாக போற்றி என்ன பயன்.இங்க மற்றொருவரை இழிவுபடுத்த நமக்கு கிடைத்த ஒரு ஆயுதம் நம் எதிரியின் மனைவி (அ) அம்மா (அ) தங்கை.அவளை கலங்கபடுத்தி பேசிவிட்டால் நீ வெற்றிபெற்றுவிடுவாயா சண்டையில்.இதே கேவலத்தை  உன் எதிரியும் உன் மீது ஏவுவான்.
பெண்ணை தெய்வமாக மதிக்கும் உன்னால், பெண்ணை தொட்டாலே வெட்டுவேன் என சொல்லும் உன்னால் ,கௌரவம்,வீரம், பாசம் என அனைத்தையும் பெண்ணை சுற்றியே கட்டமைத்துள்ள உன்னால் எப்படி பெண்ணை இப்டி இழிவுபடுத்த முடிகிறது.

#வாருங்கள்தோழிகளே:

பல ஆண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு இங்கே குறிப்பிட்ட பெயருண்டு. ஆனால் பல பெண்களுடன் செல்லும் ஆண்களுக்கு தனியே சொல்லாடல் கிடையாது.சே! இந்த ஆண்களே இப்டி தான் பெண்களை அடிமைபடுத்துறது,இழிவுபடுத்துறதே வேலை என பொங்கிவிட வேண்டாம் தோழிகளே!
ஒரு பெண்ணின் உடல் ,மன வலிகளை புரியாத ஆண் அந்த வார்த்தைகளை  பயன்படுத்துலை விட பெண்களும் அவற்றையே பயன்படுத்துவது இன்னும் மோசம்.ஆண் தமிழில் பேசும் வார்த்தைகளை நீங்கள் பண்பாடு கலாச்சாரமென நவநாகரிக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்.

#ஆஃப்லைன்பசு#ஆன்லைன்புலி:

ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தான் தீர்வாகுமே தவிர கெட்ட வார்த்தைகளல்ல.இந்த கெட்டவார்த்தை கலாச்சாரத்தை பெரிதும் வளர்த்துவிட்டதில் நம் மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு பெரும் பங்குண்டு.நேரில் பேச தயங்குபவனை கூட எளிதில் கெட்ட வார்த்தைகளை பேச வைத்தது சமூக வலைதளத்தின் வளர்ச்சி.
"நீங்க ஒரு கெட்ட வார்த்தை எக்ஸ்பர்ட்னு நினைச்சுட்டுயிருந்தீங்கன்னா  பெண்களை சாராமல் ஒரு பத்து கெட்டவார்த்தைகளை மனசுக்குள்ளே யோசிச்சு பாருங்கள் டக்குன்னு.இரண்டு மூணுக்கு மேலையே ஸ்ட்ரக்காகுது பாத்தியா.

#கடையசாத்திக்குறேன் :

என்ன தான்டா சொல்ல வர்ற, "கெட்டவார்த்தை நாங்க உள்நோக்கத்தோடெல்லாம் பேசலடா,எதோ ஃப்ரண்ட்ஸ்குள்ள ஜாலியா பேசிக்குறோம்.இதுல என்னடா இருக்கு"னு நீங்க கேட்கலாம்.இப்ப நம்ம ஃப்ரண்ட்ஸ்குள்ள பேசிக்குற பழக்கம் தான் நாளைக்கு வெளியிடத்திலும் வரும்.ஒரு நாள்ல இத நிறுத்திட முடியாது தான் ஆனா பேசுறத கொறச்சுக்க ட்ரை பண்ணலாம்ல.(என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).
.
.
.
.
.
.
.
#பி.கு:
(மேற்குரிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருந்தும்,இனி செய்ய மாட்டேன்..........செய்யமாட்டோம் என உங்கள் மீது நம்பிக்கையுடன் பதிவிடுகிறேன்)
#போலிகவிஞன்

Thursday, May 24, 2018

என் இனிய திருத்துறைப்பூண்டி;எஸ்.ஆர்.வி மற்றும் அண்ணாமலை செல்லக்குட்என்ன தான் நம்மகிட்ட தண்ணிபாட்டில் ரொம்ப நேரம் இருந்தாலும் பக்கத்துல உள்ளவன் 'தண்ணி டா மச்சி'ன்னு கேட்ட பிறகு தான் தாகம் எடுத்த மாதிரி டக்குன்னு கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு தான் கொடுப்போம்....அதே மாதிரி தான் இந்த பிளாக்குங்கிற வார்த்தைய முதல்ல எஸ்.ஆர்.வி தான் எனக்கு அறிமுகப்படுத்திச்சு.அப்புறம் நண்பன் பட க்ளைமேக்சுல கூட அந்த மில்லிமீட்டர் பையன் சொல்லுவான்னு நெனைக்குறேன்.....அப்புறம் விகடன்ல கேட்ட கேள்வி கூட இதுதான் "பிளாக் மெய்ன்டெய்ன் பண்றீங்களா இன்டிவீசுவலா"...அப்பெல்லாம் எனக்கு தோணாத எண்ணம் இன்னைக்கு தோண ஒரே காரணம், மன்னிக்கவும் இரு காரணம்;இல்ல இல்ல இரு மனிதர்கனளால் ஆன ஒரே காரணம்........நன்றி டா மச்சி சுறா மற்றும் பிரகாஷ் ..........இது போட்டிக்கு ஆரம்பிச்சேனே இல்ல பொறாமையில ஆரம்பிச்சேனான்னு தெர்ல........என்ன எழுதலாம் ......எதாவது எழுதுறேன்...............சும்மா மொக்க கதை மச்சி..!!!!!!!!!!!!