ஒரு கட்டுரைய எப்டி ஸ்டார்ட் பண்றதுன்னு இன்னும் ஒரு தெளிவில்லாமலையே இத எழுத ஸ்டார்ட் பண்றேன்.....தெளிவில்லாதது தொடக்கத்துல தான் மையக்கருல இல்ல!
.
.
.
.
ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்க ப்ரொஃபைல்குள்ள போய் எந்த ஸ்கூல், காலேஜ்ல படிச்சாங்கன்னு பார்த்தா முக்காவாசிக்கு மேல தூய, புனித ங்குற பேர்ல ஆரம்பிக்குற கிரிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன்ல தான் படிச்சிருப்போம். எனக்கு தெரிஞ்சு எந்த ஸ்கூல்,காலேஜ்களிலும் ஒரு மதத்துக்கு மட்டும் ஆதரவா நடந்துக்கிட்டதில்லை..
.
.
.
.
உதாரணத்துக்கு எங்க ஊர்ல நான் படிச்ச ரெண்டு ஸ்கூலுமே கிருஸ்தவ பள்ளி தான்.அதுலையும் ஆண்டனிஸ் ஸ்கூல்ல வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தனியா ஆடிட்டோரியமே இருக்கும்.
நானும் தினுமும் திருநீர் வச்சிட்டு தான் ஸ்கூலுக்கு போவேன்.எங்க ஸ்கூல்ல இருக்க அந்த அந்தோணியார் பள்ளிங்குறது வெறும் பேர் தான் அசோக், அக்பர் போல.வெறும் பேரா தான் நாங்க பார்த்தோம், பார்க்கவும் சொல்லி கொடுத்திருக்காங்க.
.
.
.
.
திருத்துறைப்பூண்டியில பிறந்திருந்தா St.theresas school ல கண்டிப்பா ப்ரைமரி க்ளாஸ்லையோ, ஹையர் செகண்ட்ரிலியோ படிச்ச ஒரு பிள்ளைங்களாச்சும் எங்க ஒவ்வொருத்தங்க வீட்டுலையும் இருப்பாங்க. இவ்ளோ ஏன் எங்க அம்மா, அக்கா முதகொண்டு என்னோட க்ரஷ் வரைக்கும் எல்லாரும் படிச்சது, படிச்சிட்டு இருக்கது தெரசாஸ்ல தான்.
.
.
.
எங்களை கட்டாயப்படுத்திருக்காங்க இந்த பள்ளிகள்ல பலமுறை....
ஒழுங்கா படிக்க சொல்லி....
ஒழுக்கமா படிக்க சொல்லி.....
மதவெறி பிடிச்சவனாக இருக்காதேன்னு சொல்லி......
ஆனா இந்த மாதிரி கட்டாயப்படுத்துதல் கட்டாயம் தேவை தானே.
இப்ப என்ன சொல்ல வந்தேன்னா எங்க ஊர்ல மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டுலையும் ஏன் இந்தியாவுல கூட தலைமுறை தலைமுறையா படிக்க வச்சு முன்னேத்துனது இந்த மாதிரி கிறிஸ்டியன் இன்ஸ்ட்டிடீயுசன் தான்.
அவங்க மேல சும்மா பொத்தம் பொதுவா ஒரு பழிய தூக்கி போட்டுட்டு போயிட்டு இருக்கானுங்க.இந்த பள்ளி , கல்லூரிகள்ல படிச்ச நீங்களே அமைதியா இருந்தா நாளைக்கு கர்நாடகாவுல நடந்த மாதிரி நம்ப பிள்ளைங்களும் காவி துண்ட போட்டுக்கிட்டு கலவரம் பண்ணிட்டு நிப்பான்.
கல்விய கொடுத்து மதமாத்துறாங்கன்னு கதரும் தேசியவாதிகளே. நீங்கள் ஏன் இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் திறந்து படிக்க வைக்க கூடாது. என்றும் இத செய்ய மாட்டீங்க ஏன்னா நமக்கு தேவை கல்வியாளர்கள் அல்ல கலவரகாரர்களே!
#Sanghis_are_injurious_to_humans
No comments:
Post a Comment